டோனியிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய ஜிம்பாப்வே பயிற்சியாளர்: வைரலாகும் புகைப்படம்

Report Print Jubilee Jubilee in கிரிக்கெட்
டோனியிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய ஜிம்பாப்வே பயிற்சியாளர்: வைரலாகும் புகைப்படம்

தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரரும், ஜிம்பாப்வே அணியின் தலைமை பயிற்சியாளருமான மகாயா நிடினி, இந்திய அணித்தலைவர் டோனியிடம் ஆட்டோகிராஃப் வாங்கியது ரசிகர்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

தென் ஆப்பிரிக்க அணியின் முதல் கருப்பின் கிரிக்கெட் வீரரான மகாயா நிடினி போதிய வாய்ப்பு கிடைக்காமல் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார்.

இந்த நிலையில் சமீபத்தில் தான் ஜிம்பாப்வே அணிக்கு தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு ஜிம்பாப்வே மோதிய முதல் தொடரே இந்திய அணியுடன் தான்.

இந்த தொடரில் முதல் இரு போட்டிகளில் தோல்வியைத் தழுவிய ஜிம்பாப்வே அணி ஒருநாள் தொடரை இழந்துள்ளது.

இந்நிலையில் இந்திய அணித்தலைவர் டோனியை சந்தித்து பேசிய மகாயா நிடினி, அவரிடம் ஒரு துடுப்பாட்ட மட்டையை கொடுத்து ஆட்டோகிராஃப் வாங்கியுள்ளார்.

இந்தப் புகைப்படத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments