சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்தார் கவுதம் கம்பீர்

Report Print Jubilee Jubilee in கிரிக்கெட்
சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்தார் கவுதம் கம்பீர்

ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் தலைவர் கவுதம் கம்பீர் புதிய சாதனை படைத்துள்ளார்.

நேற்று நடந்த 5வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது.

இந்த போட்டியில் கொல்கத்தா அணியின் தலைவர் கவுதம் கம்பீர் 52 பந்தில் 64 ஓட்டங்கள் எடுத்தார். இது அவருக்கு 27வது அரை சதமாக அமைந்தது.

இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிக அரை சதம் அடித்திருந்த சுரேஷ் ரெய்னாவின் சாதனையை அவர் முறியடித்தார்.

தற்போது குஜராத் அணியின் தலைவராக இருக்கும் சுரேஷ் ரெய்னா 26 அரை சதம் அடித்துள்ளார். ஐதராபாத் அணித்தலைவர் டேவிட் வார்னர், மும்பை அணித்தலைவர் ரோஹித் சர்மா ஆகியோரும் தலா 26 அரை சதம் எடுத்துள்ளனர்.

அதேசமயம் ஐபிஎல் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்தவர்கள் பட்டியலில் சுரேஷ் ரெய்னா (133 போட்டி, 3719 ஓட்டங்கள்) முதலிடத்தில் உள்ளார்.

2வது இடத்தில் ரோஹித் சர்மா (130 போட்டி, 3476 ஓட்டங்கள்), 3வது இடத்தில் கம்பீர் (119 போட்டி, 3235 ஓட்டங்கள்) உள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments