ஏழாமாண்டு தமிழ் மாணவனின் வியக்க வைக்கும் புதிய கண்டுபிடிப்பு

Report Print Vethu Vethu in கிறியேட்டிவ்

தமிழ் பாடசாலை மாணவர் ஒருவர் புதுவித முச்சக்கரவண்டி ஒன்றை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.

இந்த மூச்சக்கர வண்டி சூரிய சக்தியினால் இயங்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

7ஆம் தரத்தில் கல்வி கற்கும் 13 வயதுடைய தமிழ் மாணவர் ஒருவரினால் இந்த முச்சக்கர வண்டி உருவாக்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தை சேர்ந்த வத்தேகம பாரதி வித்தியாலயத்தில் கல்வி கற்கும் விஷ்னு சுதர்ஷன் என்ற மாணவரே இந்த புதிய கண்டுபிடிப்பிற்கு சொந்தகாரராகும்.

தனது புதிய கண்டுபிடிப்பை உறுதிப்படுத்தும் வகையில் இன்று காலை வத்தேகம எல்லை அலுவலகத்தில் வீதியில் முச்சக்கரவண்டியில் பயணம் செய்துள்ளார்.

மேலும் கிறியேட்டிவ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers