ஜாலியாக சொப்பிங் செல்ல உதவும் புதிய ரோபோ தயார்

Report Print Givitharan Givitharan in கிறியேட்டிவ்

சொப்பிங் மட்டுமல்ல தொலை தூர பயணங்களின்போது பொருட்களை கொண்டு செல்வதற்கு ட்ரவலிங் பேக் அல்லது சூட்கேஸ் பயன்படுத்தப்படும்.

எனினும் இவற்றினை தூக்கிச் செல்வது மிகவும் சிரமமான காரியமாக இருக்கும்.

இப் பிரச்சினைக்கு தீர்வாக Piaggio Group நிறுவனம் புதிய ரோபோ ஒன்றினை உருவாக்கியுள்ளது.

Gita எனும் இந்த ரோபோ தானாகவே நகர்ந்து செல்லக்கூடிய வகையிலும், ஒருவரைப் பின்தொடர்ந்து செல்லக்கூடிய வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சுமார் 40 பவுண்ட்ஸ் வரையிலான எடையினை காவிச்செல்லும் ஆற்றல் படைத்ததாகவும் காணப்படுகின்றது.

26 அங்குலங்கள் உயரமாகக் காணப்படும் இந்த ரோபோ உச்ச பட்சமாக மணிக்கு 22 மைல் வேகத்தில் பயணிக்கக்கூடியதாக இருக்கின்றது.

அடுத்த மாதம் இந்த ரோபோ உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்யப்படவுள்ளது.

எனினும் இதன் விலை தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

இதேவேளை Piaggio Group நிறுவனம் Vespa Scooter எனும் போக்குவரத்து சாதனத்தினை ஏற்கனவே உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கிறியேட்டிவ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments