நிம்மதியா உறக்கத்திற்கு உதவும் Nightingale

Report Print Givitharan Givitharan in கிறியேட்டிவ்

இரவு நேரத்தில் நிம்மதியான தூக்கத்தை கலைப்பதில் சுற்றுச் சூழலில் இருந்து ஏற்படுத்தப்படும் பல்வேறு ஒலிகளும் காரணமாக அமைகின்றன.

எனவே இப் பிரச்சினைக்கு தீர்வு தந்து ஸ்மார்ட் தூக்கத்தினை தருவதற்கு புதிய சாதனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

Nightingale எனும் குறித்த சாதனத்தினை Cambridge Sound Management நிறுவனம் வடிவமைத்துள்ளது.

இச் சாதனமானது படுக்கை அறை மற்றும் வெளிச் சூழலில் இருந்து உருவாகும் ஒலிகளை அகத்துறுஞ்சுகின்றது.

இதன் காரணமாக நிம்மதியான தூக்கத்தினை பெற ஏதுவாக அமைகின்றது.

மேலும் சூழலில் உண்டாக்கப்படும் 15 வகையான ஒலிகளை அகத்துறுஞ்சக் கூடியதாக இருத்தல் விசேட அம்சமாகும்.

இதனை iOS மற்றும் Android மொபைல் சாதனங்களின் உதவியுடன் கட்டுப்படுத்தவும் முடியும்.

விரைவில் சந்தைக்கு வரவுள்ள இச் சாதனத்தின் விலையானது 149 அமெரிக்க டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிறியேட்டிவ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments