கூகுளின் 10 லட்சம் ரூபாயை வென்ற அனுஷ்கா! அப்படி என்ன கண்டுபிடித்தார்

Report Print Raju Raju in கிறியேட்டிவ்

உடலில் ஏற்பட்டுள்ள காயம் எந்த அளவு குணமாகியிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் பேண்டேஜ்யை (Bandage) 13 வயதான பள்ளி சிறுமி கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.

Anushka Naiknavare (13) என்ற இந்திய வம்சாவளி பெண்ணான இவர் அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார். இவர் அங்குள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.

படிப்பில் புத்திசாலியான இவர் நோயாளிகளுக்கும், மருத்துவர்களுக்கும் உதவிகரமான ஒரு விடயத்தை கண்டுபிடித்துள்ளார்.

அதாவது இவர் ஒரு பேண்டேஜ் (Bandage) கண்டுபிடித்துள்ளார். அந்த பேண்டேஜானது காயம் பட்ட ஒருவரின் உடலில் ஒட்டும் போது அதன் ஈரப்பதத்தை வைத்து அந்த காயம் எந்த அளவுக்கு குணமாயிருக்கிறது என உணர்த்துகிறது.

இது நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. மேலும் இது நோயாளிகளுக்கு ஏற்படும் தேவையில்லாத வலிகளை தடுக்கிறது.

இளம் வயதில் Anushka Naiknavare செய்துள்ள இந்த அறிய கண்டுபிடிப்பை கெளரவப்படுத்தும் விதமாக கூகுள் நிறுவனம் அவருக்கு பத்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஸ்காலர்ஷிப்பை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிறியேட்டிவ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments