வாவ்...இனிமேல் நீங்கள் விரும்பிய புகைப்படங்கள் ஜொலி ஜொலிக்குமே

Report Print Givitharan Givitharan in கிறியேட்டிவ்

நினைவுகளைச் சுமக்கும் புகைப்படங்களை பிரேம் செய்து வீட்டு ஹாலில் மாட்டி விடுவது நீண்டகாலமாக பின்பற்றப்பட்டு வரும் ஒரு நடைமுறையாகும்.

இதில் ஒன்றுக்கு மேற்பட்ட புகைப்படங்களை மாட்டுவதற்கு தனித்தனியான பிரேம் அவசியம் ஆகும்.

ஆனால் இக் குறையினை நிவர்த்தி செய்யும் வகையில் தற்போது ஸ்மார்ட் போட்டோ பிரேம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இப் பிரேம்கள் 9.7 அங்குல அளவு, 2048 x 1536 Pixel Resolution கொண்டதாகவும், LED-Backlit தொழில்நுட்பத்தினைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது.

மேலும் Wi-Fi தொழில்நுட்பத்தின் ஊடாக iOS, Android ஸ்மார்ட் கைப்பேசிகளுடன் இணைக்கப்படக்கூடிய வசதியும் தரப்பட்டுள்ளது.

எனவே ஸ்மார்ட் கைப்பேசிகளில் சேமிக்கப்பட்டிருக்கும் படங்ளை விரும்பிய நேரத்தில் குறித்த போட்டோ பிரேமில் காட்சிப்படுத்தி மகிழ முடியும்.

இதன் விலையானது 399 அமெரிக்க டொலர்கள் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிறியேட்டிவ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments