டச் ஸ்கிரீன் ஹேங் ஆகுதா? இதோ இதை ட்ரை பண்ணுங்க

Report Print Deepthi Deepthi in கணணி
டச் ஸ்கிரீன் ஹேங் ஆகுதா? இதோ இதை ட்ரை பண்ணுங்க
572Shares

இன்றைய காலகட்டத்தில் மடிக்கணனி, டேப்ளட், கைப்பேசி என அனைத்து கருவிகளிலும் டச் ஸ்கிரீன் வந்து விட்டது.

டச் ஸ்கிரீன் முதல்முறை பயன்படுத்தும் போது வேகம் சீராக இருக்கும். ஆனால் நாளடைவில் வேகம் குறைந்து ஹேங் ஆக ஆரம்பித்து விடும்.

இதனை சரிசெய்ய எளிய வழிமுறைகள்:
  • திடீரென கருவி வேலை செய்யாமல் ஹேங் ஆகும் போது சிறிது நேரம் அமைதியாய் இருந்து பின்பு கருவியை ரீஸ்டார்ட்(restart) செய்ய வேண்டும். இதன் மூலம் உண்மையான பிரச்சனை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
  • சில சமயம் கருவியின் தொடுதிரை நன்றாக வேலை செய்யும், பயன்படுத்தும் செயளியில் கூட பிரச்சனை இருக்கலாம். எனவே அறிந்து கொண்டு பின்னர் கருவியில் இன்ஸ்டால்(install) செய்துள்ள தேவையில்லாத அப்ளிகேஷன்களை அன் இன்ஸ்டால்(Un Install) செய்து விட வேண்டும்.
  • இதனால் ரேம் மெமரி(Ram Memory) அளவு அதிகமாகி கருவி சீரான வேகத்தில் இயங்கும். அளவுக்கு அதிகமாக செயளிகளை கருவியில் இன்ஸ்டால்(install) செய்து வைக்க கூடாது.
  • பின்பு நீங்கள் பயன்படுத்தும் கருவியின் தொடுதிரையை உங்களால் கழற்றி மாட்ட முடியும் என்றால் முயற்சி செய்து பார்க்கலாம். ஆனால் கவனமாக கையாள்வது நல்லது.
  • மேலும், இந்த வழிமுறைகள் பெரும்பாலான கருவிகளுக்கு பொருந்தும்.

மேலும் கணணி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments