மைக்ரோசொப்ட் விண்டோவில் பாரிய கோளாறு : புதிய தீர்வு வழங்கப்பட்டது

Report Print Givitharan Givitharan in கணணி
மைக்ரோசொப்ட் விண்டோவில் பாரிய கோளாறு : புதிய தீர்வு வழங்கப்பட்டது

மைக்ரோசொப்ட் நிறுவனம் இறுதியாக அறிமுகம் செய்த விண்டோஸ் 10 இயங்குதளம் உட்பட அதற்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட விண்டோஸ் 8 இயங்குதளங்களிலும் நீல நிறத்தில் திரை தோன்றி (Blue Screen of Death) சில பிரச்சினைகளை எடுத்துக்காட்டும்.

இதனால் விண்டோஸ் இயங்குதளத்தினை மீளவும் இன்ஸ்டால் செய்யும் நிலை ஏற்படும்.

ஆனால் இதனை இலகுவாக நிவர்த்தி செய்வதற்காக மேலதிக தகவல்களை பெறும்பொருட்டு குறித்த நீல நிற திரை தோன்றும்போதே அதில் இனைணத்தள முகவரி ஒன்று (URL), QR குறியீடு என்பனவும் தோன்றும்.

இவ் இணைய முகவரியினை நேரடியாக பயன்படுத்தியோ அல்லது ஸ்மார்ட் கைப்பேசிகளின் ஊடாக QR குறியீட்டினை ஸ்கான் செய்தோ குறித்த இணையத்தளத்திற்கு சென்று அப்பிரச்சினைக்கான தீர்வை பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் கணணி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments