கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உலக அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த கொரோனா வைரஸ் காரணமாக பல தொழில்நுட்ப நிறுவனங்கள் பாதிக்கப்பட்டிருந்தன.
இதிலிருந்து மீள்வதற்காக பணியாளர்களை வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நடைமுறையை கூகுள் நிறுவனமும் பின்பற்றி வந்தது.
இந்நிலையில் தற்போது குறிப்பிட்ட சில பணியாளர்களை மாத்திரம் மீண்டும் அலுவலகத்திற்கு அழைத்து பணியாற்ற வைப்பதற்கு கூகுள் தீர்மானித்துள்ளது.
எனினும் 2021 ஆம் ஆண்டு கோடை காலம் வரை ஏனைய பணியாளர்கள் வீட்டிலிருந்தவாறே பணியாற்றுவார்கள் என ஏற்கணவே முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வீட்டிலிருந்து பணியாற்றுதல் மற்றும் குறிப்பிட்ட பணியாளர்கள் மாத்திரம் அலுவலகப் பணியாற்றுதல் எனும் முறையினை Hybrid முறை என அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.