கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கூகுள் நிறுவனமானது இந்தியாவின் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான ஜியோவுடன் முதலீடு ஒன்றினை மேற்கொண்டிருந்தது.
சுமாமர் 10 பில்லியன் டொலர்கள் முதலீட்டினை 5 தொடக்கம் 7 வரையான ஆண்டுகளுக்கு செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது PolicyBazaar நிறுவனத்தில் சுமார் 150 மில்லியன் டொலர்களை முதலீடு செய்யவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி PolicyBazaar நிறுவனத்தின் 15 சதவீதமான பங்குகளை கூகுள் தன்வசப்படுத்தவுள்ளது.
PolicyBazaar என்பது இந்தியாவிலுள்ள பிரபல காப்புறுதி நிறுவனங்களுள் ஒன்றாகக் காணப்படுகின்றது.
இந்நிறுவனம் 2008 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.