மேலும் 21 நகரங்களுக்கு 5G சேவையினை விஸ்தரித்தது பிரபல மொபைல் வலையமைப்பு நிறுவனம்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

ஐரோப்பாவின் பிரபல மொபைல் வலையமைப்பு சேவை வழங்குநரான EE நிறுவனம் தனது 5G சேவையினை மேலும் விஸ்தரித்துள்ளது.

இதன்படி ஐக்கிய இராச்சியத்தில் மேலும் 21 நகரங்களில் உள்ளவர்கள் இச் சேவையினைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இதேவேளை தற்போது மொத்தமாக 71 நகரங்களில் EE நிறுவனம் 5G வலையமைப்பு சேவையினை வழங்கி வருகின்றது.

அதிகமாக மக்கள் நடமாட்டமுள்ள பகுதிகளிலேயே இச் சேவை தற்போது வழங்கப்பட்டுவருகின்றது.

Bath’s Royal Crescent, Pulteney Bridge, London Bridge, London’s Thornton Heath புகையில்லா நிலையம் என்பனவும் இவற்றில் அடங்கும்.

கடந்த 2019 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அறிமுகம் செய்யப்பட்ட 5G சேவையானது குறுகிய காலத்தில் பரந்த பிரதேசத்திற்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்