தனது முக்கிய நிகழ்வு ஒன்றினை ரத்துச் செய்தது ஆப்பிள் நிறுவனம்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

ஆப்பிள் நிறுவனமானது விரைவில் iPhone 9 உட்பட மேலும் சில புதிய சாதனங்களை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

இதற்கான அறிமுக நிகழ்வினை எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த நிகழ்வினை திடீரென ரத்துச் செய்துள்ளது.

இந்த தகவலை Cult of Mac வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாகவே இந்நிகழ்வு ரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக சுமார் 1,000 வரையான மக்களை உள்ளடக்கியதாக இந்நிகழ்வினை நடத்துவதற்கு ஆப்பிள் நிறுவனம் முனைப்புக்காட்டி வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்வில் ஆப்பிள் டிவி, மேக்புக் புரோ என்பனவும் அறிமுகம் செய்யப்படவிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்