5G வலையமைப்பு சேவையினை மேலும் விஸ்தரிக்கும் முன்னணி நிறுவனம்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்
63Shares

ஐரோப்பாவின் முன்னணி தொலைபேசி வலையமைப்பு சேவை வழங்குனரான Vodafone ஏற்கனவே 5G வலையமைப்பு சேவையினை வழங்கி வருகின்றது.

எனினும் இச் சேவையானது குறிப்பிட்ட சில நகரங்களுக்கு மாத்திரம் தற்போது வழங்கப்பட்டு வருவதுடன் பகுதி பகுதியாக விஸ்தரிக்கப்பட்டு வருகின்றது.

இதன் ஒரு அங்கமாக மேலும் சில நகரங்களுக்கு 5G வலையமைப்பு சேவையை வழங்க Vodafone முன்வந்துள்ளது.

இதன்படி பிரித்தானியாவில் Greater Manchester, Cheadle, Rochdale மற்றும் Stockport ஆகிய நான்கு நகரங்களிற்கு இச் சேவை விஸ்தரிக்கப்படவுள்ளது.

இதேவேளை 5G multi-operator radio access network (MORAN) தொழில்நுட்பத்தினை முதலாவதாக அறிமுகம் செய்யும் பிரித்தானிய தொலைபேசி வலையமைப்பு நிறுவனமாகவும் Vodafone காணப்படுகின்றது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...