2019 ஆம் ஆண்டு இந்திய நிறுவனங்களை நிலைகுலைய வைத்த மல்வேர்கள்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

கடந்த 2019 ஆம் ஆண்டில் இந்திய நிறுவனங்களை சுமார் 14.6 கோடி மல்வேர்கள் தாக்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கையானது 2018 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 48 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உற்பத்தி நிறுவனங்கள், வங்கிகள், காப்புறுதி நிறுவனங்கள், ஏனைய நிதி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், சுகாதார நிறுவனங்கள், அரச நிறுவனங்கள் என அனைத்து இடங்களிலும் மல்வேர் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த தகவலை Quick Heal Technologies எனப்படும் தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு நிறுவனம் ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது.

மேலும் கடந்த வருடத்தில் இந்தியாவிலேயே அதிக சைபர் தாக்குதல் முயற்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்