பேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக பல லட்சம் டொலர்கள் அபராதம்: அதிர வைக்கும் காரணம்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

முன்னணி இணைய நிறுவனங்களுக்கு எதிராக அண்மைக்காலங்களில் பெருமளவில் அபராதத்தொகையானது அறவிடப்படுவது அவ்வப்போது நடைபெற்றுவருகின்றது.

பயனர்களின் இரகசியத் தகவல்களை கசியவிடுவதே இதன் பிரதான காரணமாகும்.

இதே காரணததிற்காக தற்போது பேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக 16 இலட்சம் அமெரிக்க டொலர்கள் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

பிரேஸில் நாட்டின் நீதி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சே இந்த அபராதத் தொகையினை விதித்துள்ளது.

சுமார் 443,000 பிரேஸில் நாட்டு பயனர்களின் தகவல்களை கசியவிட்டதன் காரணமாகவே பேஸ்புக் நிறுவனத்திற்கு இந்நிலை எற்பட்டுள்ளது.

இச் சம்பவமானது ஹேம்பிரிஜ் அனாலிட்டிக்கா வழக்குடன் தொடர்புபட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...