பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

சமூகவலைத்தள ஜாம்பவானாக திகழும் பேஸ்புக்கில் பதிவேற்றப்படும் தகவல்கள் விரைவாக பரவக்கூடியதாக இருக்கின்றது.

இதன் காரணமாக பொய்யான தகவல்களும் அவ்வப்போது பரப்பப்படுகின்றன.

இது பேஸ்புக் நிறுவனத்திற்கு பெரும் சவாலாக விளங்குகின்றது.

எனவே போலியான தகவல்கள் பரப்பப்படுவதை தவிர்ப்பதற்கு பல்வேறு முயற்சிகளையும் அந்நிறுவனம் எடுத்திருந்தபோதும் வெற்றியளிக்கவில்லை.

இந்நிலையில் தற்போது போலியான தகவல் தொடர்பில் பயனர்களுக்கு எச்சரிக்கக்கூடிய பொறிமுறை ஒன்றினை உருவாக்கியுள்ளதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் கர்நாடகாவில் இது தொடர்பான பைலட் புரோகிராம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்து தற்போது 12 மொழிகளில் போலித் தகவல்களை கண்டறிந்து பயனர்களுக்கு எச்சரிக்கை செய்யக்கூடிய பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்