டுபாய் பொலிசாருடன் சேவையாற்ற இணையும் டெஸ்லா நிறுவனத்தின் Cybertruck

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

இலத்திரனியல் வாகன உற்பத்தியில் இன்று முன்னணியில் வகிக்கும் நிறுவனமான டெஸ்லா விளங்குகின்றது.

இந்நிறுவனம் வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தில் முற்றிலும் மாறுபட்ட Cybertruck எனும் வாகனத்தினை அண்மையில் அறிமுகம் செய்திருந்தது.

இந்நிலையில் குறித்த Cybertruck வாகனங்கள் டுபாய் பொலிசில் சேவைக்கு இணைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டுபாய் பொலிஸ் ஆனது தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு இவ் வாகனம் சேவையில் இணைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை டெஸ்லா நிறுவனத்திற்கு இதுவரை உலகெங்கிலும் இருந்து 140,000 Cybertruck ஆர்டர்கள் கிடைத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்