இடம்மாறுகிறது ஹுவாவி நிறுவனத்தின் ஆய்வு நிலையம்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்
104Shares

தொழில்நுட்ப உலகில் ஏனைய நிறுவனங்களுக்கு மிகுந்த சவாலாக விளங்கும் சீன நிறுவனமான ஹுவாவி புதிய தீர்மானம் ஒன்றினை எடுத்துள்ளது.

இதன்படி தனது ஆய்வு நிறுவனத்தினை கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு மாற்றுவதற்கு தீர்மானித்துள்ளது.

இந்த தகவலை ஹுவாவி நிறுவனத்தினை உருவாக்கியவரான Ren Zhengfei தெரிவித்துள்ளார்.

கனடாவின் Globe and Mail பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் இந்த தகவலை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தற்போது சீனாவில் தொலைத்தொடர்பு சாதனங்கள் சிலவற்றினை உற்பத்தி செய்துவரும் குறித்த நிறுவனம் ஐரோப்பிய நாடுகளிலும் தனது தொலைத்தொடர்பு சாதன உற்பத்திக்கான கிளை நிறுவனம் ஒன்றினை நிர்மாணிக்க தீர்மானித்துள்ளது.

இங்கு 5G வலையமைப்பிற்கு தேவையான சாதனங்கள் உற்பத்தி செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்