பயன்படுத்தப்படாத கணக்குகளை நீக்கும் தீர்மானத்தை தற்காலிகமாக டுவிட்டர் நிறுத்த காரணம் வெளியானது

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

சுமார் ஆறுமாத காலம் தொடர்ச்சியாக பயன்படுத்தப்படாத கணக்குளை நிரந்தரமாக நீக்குவதற்கு டுவிட்டர் நிறுவனம் தீர்மானித்திருந்தமை தெரிந்ததே.

எனினும் தற்காலிகமாக இந்த தீர்மானத்தினை அந்நிறுவனம் நிறுத்திவைத்துள்ளது.

பயனர்களின் எதிர்ப்பே காரணம் என முதலில் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் உண்மையான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

அதாவது டுவிட்டர் கணக்கு வைத்திருந்த பயனர்கள் இறந்திருந்தால் அவர்களின் கணக்குகளை நீக்குவதா அல்லது அவர்களின் நினைவாக நீடித்திருக்கச் செய்வதா என்ற குழப்பம் ஏற்பட்டமையே உண்மையான காரணமாகும்.

எனினும் இறந்தவர்களின் கணக்குகள் மற்றும் உள்ளடக்கங்களை அவர்களின் நினைவாக நீடித்திருக்க செய்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டுவிட்டர் கணக்கு வைத்திருந்து இறந்தவர்களை அடையாளம் கண்டு ஏனையவர்களின் கணக்குகளை நீக்க வேண்டும். இதற்கு சிறிது காலம் எடுக்கும் என நம்பப்படுகின்றது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்