இந்த பிரபல நிறுவனத்தின் பொருட்களை இனி அமேஷானில் வாங்க முடியாது

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

ஸ்போட்ஸ் அணிகலன்களை விற்பனை செய்யும் பிரபல நிறுவனமாக Nike காணப்படுகின்றது.

இந்நிறுவனமானது 2017 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து அமேஷானில் தனது பொருட்களை விற்பனை செய்து வந்தது.

எனினும் எதிர்காலத்தில் அமேஷானில் தனது பொருட்களை விற்பனை செய்வதில்லை என Nike நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

இந்த தகவலை அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான John Donahoe தெரிவித்துள்ளார்.

இவர் Ebay நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியாவார்.

இப் புதிய முடிவு குறித்த கருத்து வெளியிட்ட அவர் தனது வாடிக்கையாளர்களுடன் நேரடியான தொடர்புகளை பேணுவதற்கு விரும்புவதாலேயே Nike நிறுவனம் அமேஷானில் தனது பொருட்களை விற்பனை செய்வதில்ல என தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்