3G வலையமைப்பு சேவையை முற்றாக நிறுத்தும் ஏர்டெல் நிறுவனம்: எங்கு தெரியுமா?

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

இந்தியாவில் மொபைல் வலையமைப்பு சேவையை வழங்கிவரும் பிரபல நிறுவனங்களுள் ஒன்றாக ஏர்டெல் விளங்குகின்றது.

இந்நிறுவனம் கேரள மாநிலத்தில் தனது 3G சேவையை முற்றாக நிறுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.

அங்குள்ள வாடிக்கையாளர்களில் அதிகமானவர்கள் தற்போது 4G சேவைக்கு மாறியுள்ள நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஏர்டெல் குறிப்பிட்டுள்ளது.

இதனால் 3G சிம்கார்ட்கள் அனைத்தையும் 4G சிம்மாக மாற்றுமாறு வாடிக்கையாளர்களிடம் ஏர்டெல் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

முன்னர் ஹரியானாவிலும் 3G சேவை நிறுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்தே தற்போது கேரளாவிலும் நிறுத்தப்படுகின்றது.

இதேவேளை 2G வலையமைப்பு சேவை தொடர்ந்தும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers