மூடப்படுகின்றது யாகூ நிறுவனம்: தரவுகளை பாதுகாக்க இன்னும் இருப்பது சில வாரங்களே

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

கூகுள் அறிமுகமாவதற்கு முன்னர் இணைய உலகின் ஜாம்பவானாக யாகூ நிறுவனமே திகழ்ந்தது.

சுமார் இரண்டு தசாப்தகால வரலாற்றினைக் கொண்ட யாகூ நிறுவனம் மூடப்படவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனவே யாகூ நிறுவனத்தின் சேவைகளில் பதிவேற்றம் செய்யப்பட்ட தரவுகளை பயனர்கள் விரும்பின் தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

இதற்காக இன்னும் 5 வாரகால அவகாசமே காணப்படுகின்றது.

அதாவது எதிர்வரும் டிசம்பர் மாதம் 14 ஆம் திகதியுடன் இதன் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்படவுள்ளன.

2001 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட யாகூ நிறுவனம் பல் மில்லியன் வரையான பயனர்களை தன்னகத்தே கொண்டு சுமார் 18 வருட காலம் இணைய உலகில் பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்