2020 ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்களுக்கு மைக்ரோசொப்ட் விடுத்துள்ள முன்னெச்சரிக்கை

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறவுள்ளமை தெரிந்ததே.

இப்படியிருக்கையில் குறித்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு மைக்ரோசொப்ட் நிறுவனம் முன்னெச்சரிக்கை ஒன்றினை விடுத்துள்ளது.

அதாவது ரஷ்யாவை சேர்ந்த ஹேக்கர்கள் இவ் ஒலிம்பிக் போட்டிகளை குழப்பும் நோக்கில் செயற்பட்டுவருகின்றமை தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Fancy Bear, APT28 அல்லது Strontium எனப்படும் ஹேக்கிங் குழுக்களே இந்த நாசகார வேலைகளை செய்துகொண்டிருப்பதாகவும் அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

செப்டெம்பர் 16 ஆம் திகதி முதலே ஆரம்பிக்கப்பட்ட இந்த ஹேக்கிங்கில் 16 விளையாட்டுக்கள் மற்றும் ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிறுவனங்கள் என்பன குறிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இந்த தகவல்கள் Microsoft Threat Intelligence Centre இல் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்