பேஸ்புக்கின் டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தில் இணையுமா டுவிட்டர்?

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

பேஸ்புக் நிறுவனமானது Libra எனப்படும் டிஜிட்டல் பணப்பரிமாற்ற சேவையினை உருவாக்கி வருகின்றது.

எனினும் பேஸ்புக் நிறுவனத்தின் இப் பணப்பரிமாற்ற சேவையில் இணைந்து பணியாற்றவிருந்து சில நிறுவனங்கள் பின்னர் பின்வாங்கியிருந்தன.

இதனை அடுத்து Libra டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தில் டுவிட்டர் இணைந்து பணியாற்றுமா என வினவப்பட்ட கேள்விக்கு ஒருபோதும் இணையமாட்டாது என பதிலளிக்கப்பட்டுள்ளது.

டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியான Jack Dorsey இதனைத் தெரிவித்துள்ளார்.

Libra ஒரு திறந்த பணப்பரிமாற்ற சேவையாக இருக்காது என்பதை இதற்கு காரணமாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்