பயனர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பல அப்பிளிக்கேஷன்கள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்தும் நீக்கப்பட்டு வருகின்றன.
அதேநேரம் iOS சாதனங்களிலும் இவ்வாறான அப்பிளிக்கேஷன்கள் காணப்படுகின்றன.
இதற்கு சான்றாக தற்போது 15 அப்பிளிக்கேஷன்களை ஆப்ஸ் ஸ்டோரிலிருந்து ஆப்பிள் நீக்கியுள்ளது.
இவை அனைத்தும் குஜராத்தை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று உருவாக்கியவையாகும்.
Clickware எனப்படும் விளம்பரத்தை அடிப்படையாகக் கொண்ட 17 அப்பிளிக்கேஷன்களை Wandera மொபைல் பாதுகாப்பு நிறுவனம் கண்டுபிடித்திருந்தது.
இதனையடுத்தே அவற்றில் 15 அப்பிளிக்கேஷன்களை ஆப்பிள் அதிரடியாக ஆப்ஸ் ஸ்டோரிலிருந்த நீக்கியுள்ளது.