மற்றுமொரு முன்னாள் மைக்ரோசொப்ட் பணியாளரை தம்வசப்படுத்தும் கூகுள்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

முன்னர் மைக்ரோசொப்ட் நிறுவனத்தில் பணியாற்றிய Javier Soltero என்பவரை கூகுள் நிறுவனம் பணிக்கு அமர்த்தவுள்ளது.

இவரை கூகுளின் G Suite தொழில்நுட்பத்திற்கு தலைவராக நியமிக்கவும் உள்ளது.

ஜிமெயில், கூகுள் டொக்ஸ், கூகுள் ட்ரைவ் உட்பட மேலும் பல சேவைகளை உள்ளடக்கியதாக G Suite காணப்படுகின்றது.

இதில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதற்கு பொறுப்பாகவே Javier Soltero நியமிக்கப்படவுள்ளார்.

இதனை அவரே தனது டுவிட்டர் பக்கத்தின் ஊடாக உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றுவதற்கு தான் மிகவும் ஆவலாக இருப்பதாகவும் தனது டுவீட்டில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்