5G மொபைல் வலையமைப்பினை அறிமுகம் செய்யும் மற்றுமொரு முன்னணி நிறுவனம்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

ஐரோப்பிய நாடுகளில் உள்ள முன்னணி மொபைல் வலையமைப்பு நிறுவனங்கள் ஐந்தாம் தலைமுறை மொபைல் வலையமைப்பினை அறிமுகம் செய்து வருகின்றன.

இவற்றின் வரிசையில் தற்போது O2 நிறுவனமும் இணைந்துள்ளது.

தற்போது London, Cardiff, Belfast, Edinburgh, Slow மற்றும் Leeds ஆகிய நகரங்களில் 5G வலையமைப்பினை அறிமுகம் செய்யவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அதுமாத்திரமன்றி இவ் வருட இறுதிக்குள் 20 நகரங்களில் இவ் வலையமைப்பினை அறிமுகம் செய்யவுள்ளதாகவும் O2 நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் அடுத்த கட்டமாக 2020 ஆம் ஆண்டு கோடைகாலப் பகுதியில் 5G வலைமைப்பு விஸ்தரிக்கப்பட்டிருக்கும் நகரங்களின் எண்ணிக்கை 50 ஆக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers