iPhone XR கைப்பேசிகளை இந்தியாவில் வடிவமைக்கிறது ஆப்பிள் நிறுவனம்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

உலகளவில் மிகப்பெரிய ஸ்மார்ட் கைப்பேசி சந்தைகளுள் ஒன்றாக இந்தியாவும் காணப்படுகின்றது.

இதனைக் கருத்தில் கொண்டுள்ள ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது கைப்பேசி உற்பத்தி நிறுவத்தின் கிளையினை ஏற்கனவே அமைத்திருந்தது.

தற்பாது இங்கிருந்தே iPhone XR கைப்பேசிகளை வடிவமைத்து இந்தியா முழுவதும் சந்தைப்படுத்தவுள்ளது.

உள்நாட்டிலேயே கைப்பேசிகளை வடிவமைத்து அறிமுகம் செய்வதால் இறக்குமதி செய்வதற்கான செலவு மற்றும் உற்பத்தி செலவு என்பவற்றினை குறைக்க முடியும் என ஆப்பிள் கருதுகின்றது.

அத்துடன் குறித்த கைப்பேசிகளை குறைந்த விலையில் விற்பனை செய்வதால் அதிகளவில் விற்பனையாகக் கூடிய சாத்தியமும் காணப்படுகின்றது.

இதனை அடுத்து iPhone 11, 11 Pro மற்றும் 11 Pro Max ஆகிய கைப்பேசிகளும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers