ஹேக்கர்களுக்கு 100,000 டொலர்கள் செலுத்திய Zomato: காரணம் தெரியுமா?

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

இந்தியாவின் முன்னணி ஒன்லைன் ஊடாக உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான Zomato ஹேக்கர்களுக்கு 100,000 டொலர்கள் செலுத்திய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

சுமார் 435 ஹேக்கர்களுக்கு இந்த தொகை வழங்கப்பட்டுள்ளது.

தனது அப்பிளிக்கேஷன் மற்றும் இணையத்தளத்திலுள்ள குறைபாடுகளை கண்டறிந்து நிவர்த்தி செய்வதற்காகவே இவ்வாறு ஹேக்கர்களுக்கு Zomato பணம் செலுத்தியுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு Zomato ஒன்லைன் சேவையில் ஊடுருவிய ஹேக்கர்கள் பதிவு செய்யப்பட்ட சுமார் 17 மில்லியன் பயனர்களின் பதிவுகளை திருடியிருந்தனர்.

எனினும் பயனர்களின் பணப்பரிமாற்றம் மற்றும் கிரடிட் கார்ட் தொடர்பான தகவல்கள் எதுவும் திருப்படவில்லை என்பதை அந்நிறுவனம் அப்போது உறுதிப்படுத்தியிருந்தது.

இதனை அடுத்து தற்போது மாதாந்தும் 55 மில்லியன் பயனர்களைக் கொண்டுள்ள நிலையில் ஒன்லைனில் உள்ள அனைத்து குறைபாடுகளையும் நீக்குவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை அந்நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்