பேஸ்புக் நிறுவனத்திற்கு காத்திருக்கும் மற்றுமொரு சோகச் செய்தி

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

இன்று சமூகவலைத்தளங்களில் ஏராளமான சட்டவிரோதமான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

இதற்கு பேஸ்புக்கும் விதிவிலக்கு அல்ல.

இதன் காரணமாக தற்போது பேஸ்புக் நிறுவனம் மற்றுமொரு பிரச்னையை எதிர்நோக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அதாவது ஐரோப்பிய நீதிமன்றமானது சட்டவிரோதமான கருத்துரைகள் தொடர்பில் பேஸ்புக் நிறுவனத்திற்கு கடும் உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதன்படி ஐரோப்பிய நாடுகளில் மாத்திரமன்றி உலகெங்கிலும் இவ்வாறான சட்டவிரோத கருத்துக்கள் பகிரப்படும்பேது அவற்றினை நீக்குமாறு பேஸ்புக் நிறுவனம் உத்தரவிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய அரசியலாளரான Eva Glawischnig-Piesczek என்பவர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட எதிர்மறைக் கருத்துரைகள் தொடர்பில் அவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இச் சம்பவத்தின் பின்னரே ஐரோப்பிய நீதிமன்றம் பேஸ்புக் நிறுவனத்திற்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்