ஐபோன்களில் புதிய வகை திரை: பல மில்லியன் டொலர்கள் முதலீடு செய்யும் ஆப்பிள்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

இவ் வருடம் ஆப்பிள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன்களை கடந்த வருடம் அறிமுகம் செய்த ஐபோன்களுடன் ஒப்பிடும்போது பெரிய அளவில் மாற்றங்கள் எதுவும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

புரோசசரின் வேகம் மற்றும் கமெராக்களிலேயே மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

இப்படியான நிலையில் எதிர்காலத்தில் அறிமுகம் செய்யவுள்ள ஐபோன்களில் புதிய தொழில்நுட்பத்தினைக் கொண்ட திரைகளை அறிமுகம் செய்ய ஆப்பிள் நிறுவனம் எதிர்பார்த்துள்ளது.

இது தொடர்பான ஆய்வுகளுக்காக சுமார் 250 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஆப்பிள் நிறுவனம் Corning Inc நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.

Corning Inc நிறுவனமே இதுவரை காலமும் ஐபோன்களுக்கு தேவையான தொடுதிரைகளை வடிவமைத்து ஆப்பிள் நிறுவனத்திற்கு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்