33 பில்லியன் டொலர்களை இழந்த அமேஷான் CEO: எப்படி தெரியுமா?

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

உலகின் முதலாவது பணக்காரராக இருந்த மைக்ரோசொப்ட் நிறுவனர் பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளி அந்த இடத்தை பிடித்தவர் அமேஷான் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியான Jeff Bezos.

எனினும் இவர் தற்போது 33 பில்லியன் அமெரிக்க டொலர்களை இழக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

தனது மனைவியை விவாகரத்து செய்துள்ள நிலையில் தனது பங்கில் நான்கில் ஒன்றினை மனைவிக்கு வழங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் Jeff Bezos.

இவரது ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 150 பில்லியன் டொலர்கள் என ஏற்கனவே கணக்கிடப்பட்டிருந்த நிலையில் தற்போது 117.8 பில்லியன் டொலர்களாக குறைவடைந்துள்ளது.

எனினும் தற்போதுகூட மைக்ரோசொப்ட் நிறுவனர் பில்கேட்ஸினை விடவும் 13 பில்லியன் டொலர்கள் அதிகமான சொத்துக்களை கொண்டு உலகின் முதலாவது பணக்காரர் எனும் பெயரை தக்க வைத்துள்ளார்.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்