அலுவலக பணிகளுக்கு பெரும் உதவியாக MS Word, MS Excel, MS Access, MS Powerpoint போன்ற மென்பொருட்கள் பெரிதும் உதவியாக இருக்கின்றன.
இம் மென்பொருட்களில் மேற்கொள்ளப்படும் பணிகளைப் போன்றே இணையத்தளத்திலும் மேற்கொள்வதற்காக Office Online எனும் சேவையினை மைக்ரோசொப்ட் நிறுவனம் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அறிமுகம் செய்திருந்தது.
இவ் வசதியினைப் பயன்படுத்துவதற்கு இணைய இணைப்பு இருந்தால் போதும், மேற்கண்ட மென்பொருட்கள் எதுவும் நிறுவப்படவேண்டிய அவசியம் இல்லை.
இப்படியிருக்கையில் Office Online எனும் தனது இணையத்தினூடான சேவையினை தற்போது Office என்று பெயர் மாற்றம் செய்துள்ளது மைக்ரோசொப்ட் நிறுவனம்.
அத்துடன் இதுவரை Word Online, Excel Online என அழைக்கப்பட்டு வந்திருந்த போதிலும் இனிவரும் காலத்தில் Word, Excel போன்று எளிமையான பதத்தினாலேயே அழைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.