அமெரிக்க விற்பனையாளர்களை வளைக்கும் அலிபாபாவின் புதிய திட்டம்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

சீனாவின் பிரம்மாண்டமான மின் வியாபார நிறுவனமான அலிபாபா தற்போது அகலக்கால் வைக்க ஆரம்பித்துள்ளது.

இதன்படி தனது தளத்தின் ஊடாக அமெரிக்க விற்பனையாளர்களும் தமது பொருட்களை விற்பனை செய்யவதற்கான அனுமதியை வழங்கவுள்ளது.

இதற்காக பிரத்தியேகமான டூல்களையும் (Tools) தனது தளத்தில் அறிமுகம் செய்யவுள்ளது.

தற்போது உலக அளவில் மின் வணிகத்தில் அசத்திவரும் பிரம்மாண்ட நிறுவனமான அமேஷானுடன் போட்டி போடுவதற்காகவே இந்த திட்டத்தினை அலிபாபா அறிமுகம் செய்கின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தற்போதுவரை உலகெங்கிலும் உள்ள 190 நாடுகளில் இருந்து 10 மில்லியன் ஆக்டிவ் பயனர்களை தாம் கொண்டுள்ளதாக அலிபாபா நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்