இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் ஹுவாவி நிறுவனம் இடைவிடாது தனது தொழில்நுட்ப மற்றும் வியாபார விஸ்தரிப்புக்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது.
இதன் அடிப்படையில் இந்தியாவின் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது.
இதற்கான ஒப்பந்தம் நேற்யை தினம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
தனது ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கான சந்தை வாய்ப்பினை விரிவுபடுத்தும் முகமாகவே மைக்ரோமேக்ஸ் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளதாக ஹுவாவி நிறுவனத்தின் இந்தியாவிற்கான துணைத்தலைவர் ரிஷி கிஷோர் குப்தா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 2018 ஆம் ஆண்டு ஹுவாவி நிறுவனம் காலடி பதித்தது.
இதேவேளை இந்தியாவில் காலடி பதித்த உலகின் இரண்டாவது பெரிய ஸ்மார்ட் கைப்பேசி விற்பனையாளராகவும் ஹுவாவி விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.