Hongmeng OS தொடர்பில் ஹுவாவி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

ஹுவாவி நிறுவனம் அமெரிக்காவில் வியாபார கறுப்பு பட்டியலில் இணைக்கப்பட்ட பின்னர் குறித்த நிறுவனத்துடன் இணைந்து செயற்பட்ட பல அமெரிக்க நிறுவனங்களும் தொடர்பை துண்டித்திருந்தன.

இதனால் கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தில் செயற்படும் ஹுவாவி கைப்பேசிகளின் எதிர்காலமும் கேள்விக்குறியாகியது.

இதற்கிடையில் ஹுவாவி நிறுவனம் தனது கைப்பேசிகளுக்காக Hongmeng OS எனம் இயங்குதளத்தினை வடிவமைக்கும் முயற்சியில் இறங்கியது.

எனவே அன்ரோயிட் இயங்குதளத்திற்கு பதிலாக Hongmeng OS இனை ஹுவாவி கைப்பேசிகள் கொண்டிருக்கும் என்ற தகவல் வேகமாக பரவியது.

எனினும் இது அன்ட்ரோயிட் இயங்குதளத்திற்கு மாற்றீடு அல்ல என தற்போது ஹுவாவி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹுவாவி நிறுவனத்தின் துணை பிரதமர் கத்தரீன் ஷென் கடந்த வியாழக்கிழமை

இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்த இயங்குதளமானத தொழிற்சாலைகளில் உள்ள இயந்திரங்களை இயக்குவதற்கு பயன்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers