ஸ்மார்ட் கைப்பேசி உலகில் கொடிகட்டிப் பறக்கும் ஆப்பிள் நிறுவனமானது கைப்பேசி தவிர ஐபேட், ஐபொட், கணினிகள் என்பவற்றினையும் வடிவமைத்து அறிமுகம் செய்து வருகின்றது.
இவ்வாறு அறிமுகம் செய்யப்படும் இரு மடிக்கணினிகளின் விலையினை அந்நிறுவனம் குறைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதன்படி MacBook Pro மற்றும் MacBook Air என்பவற்றின் விலைகளே குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் இரு சாதனங்களின் விலையும் இந்திய பெறுமதியில் சுமார் 30,000 ரூபா வரையில் விலைக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
குறித்த இரு சாதனங்களும் கடந்த 2018 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டவையாகும்.
இதேவேளை மாணவர்களுக்கு மேலும் விலைக்குறைப்பு செய்யப்பட்டு இச் சாதனங்கள் வழங்கப்படுகின்றன.
எனினும் இச் சலுகைகளை இந்தியாவில் மாத்திரமே பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.