கடந்த வருடம் ஆப்பிள் நிறுவனம் இப்படி ஒரு பிரச்சினையை எதிர்நோக்கியதா?

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

ஆப்பிள் நிறுவனம் தனது மொபைல் சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷன்களை ஆப்ஸ் ஸ்டோர் ஊடாக வழங்கி வருகின்றது.

இப்படியிருக்கையில் ஆப்ஸ் ஸ்டோரிலிருந்து சுமார் 634 அப்பிளிக்கேஷன்களை நீக்குமாறு கோரிக்கைகள் வந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக 11 நாடுகளின் அரசாங்கத்திடமிருந்து 80 கோரிக்கைகள் வந்திருந்ததாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இக் கோரிக்கைகள் அனைத்தும் 2018 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 1 ஆம் திகதிக்கும் 2018 டிசம்பர் 31 ஆம் திகதிக்கும் இடையில் விடுக்கப்பட்டிருந்ததாக மேலும் தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக சீனாவிடமிருந்து 56 கோரிக்கைகள் வந்திருந்ததுடன் 626 அப்பிளிக்கேஷன்களை நீக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் இக் கோரிக்கைக்கு அமைவாக ஆப்பிள் நிறுவனம் 517 அப்பிளிக்கேஷன்களை மாத்திரம் நீக்கியிருந்ததாகவும் தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்