ஐபோன்களுக்கு உருவவியல் வடிவமைப்பு செய்பவர் ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து விலகல்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு உருவம் கொடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர் Jony Ive.

இவர் ஸ்டீவ் ஜாப்ஸ் காலத்திலிருந்து ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் இவ் வருட இறுதியுடன் ஆப்பிள் நிறுவனத்திலிருந்து விலகவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

சொந்த நிறுவனம் ஒன்றினை ஆரம்பிக்கும் நோக்கிலேயே இவ்வாறு ஆப்பிள் நிறுவனத்திலிருந்து விலகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரின் விலகலானது ஆப்பிள் நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காரணம் ஐபோன்களை மாத்திரமன்றி, iMac, iPod போன்றவற்றிற்கான உருவ வடிவமைப்பும் இவரின் தலைமையின் கீழே மேற்கொள்ளப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்