இரண்டாவது விண்கலத்தினை நிலவிற்கு அனுப்பும் திட்டத்தை கைவிட்டது இஸ்ரேல் நிறுவனம்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

இஸ்ரேலை தளமாகக் கொண்டு இயங்கும் வியாபார நோக்கமற்ற நிறுவனமன SpaceIL ஆனது விரைவில் புதிய விண்கலம் ஒன்றினை இரண்டாவது தடவையாக நிலவிற்கு அனுப்பவுள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்தது.

எனினும் இத் திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தற்போது அறிவித்துள்ளது.

இதற்கு முன் கடந்த வசந்த காலப் பகுதியில் முதலாவது விண்கலத்தினை நிலவிற்கு அனுப்பியிருந்தது.

எனினும் குறித்த விண்கலம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளாகியிருந்தது.

இதனை அடுத்தே இரண்டாவது முயற்சி தொடர்பிலான அறிவித்தலை குறித்த நிறுவனம் வெளியிட்டிருந்தது.

புதிய ஒரு நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு Beresheet 2 எனும் விண்கலத்தினை உருவாக்கவுள்ளதனால் நிலவிற்கான இரண்டாவது திட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்