ஹுவாவி நிறுவனத்தின் மற்றுமொரு திட்டம்: இலக்கு வைக்கப்படும் நாடு எது தெரியுமா?

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

தொழில்நுட்ப உலகில் அண்மைக்காலமாக அதிக சங்கடங்களை எதிர்நோக்கி வரும் நிறுவனமாக ஹுவாவி காணப்படுகின்றது.

சீனாவை தளமாகக் கொண்ட இந்த நிறுவனம் ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பில் கொடிகட்டிப் பறப்பதுடன் இந்தியாவில் பாரிய சந்தை வாய்ப்பினை பெற்றுள்ளது.

இந்நிலையில் டேப்லட் விற்பனையிலும் இந்தியாவில் சிறந்த இடத்தை பிடிப்பதற்கு திட்மிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை இஷான் அகர்வால் தனது டுவிட்டர் தளத்தினூடாக வெளியிட்டுள்ளார்.

குறித்த டுவீட்டில் டேப்லட்டின் சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

பொதுவாக ஹுவாவி நிறுவனத்தின் தயாரிப்புக்கள் விலை குறைந்தவையாகும்.

அதே நேரம் அன்ரோயிட் இயங்குதளத்தினைக் கொண்டதாக இந்த டேப்லட்கள் வடிவமைக்கப்பட்டிருப்பதால் பயனர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பினைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்