தொழில்நுட்ப உலகில் மற்றுமொரு புரட்சிக்கு தயாராகும் OnePlus நிறுவனம்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

முன்னணி ஸ்மார்ட் கைப்பேசி நிறுவனங்களில் OnePlus நிறுவனமும் ஒன்றாகும்.

ஆப்பிள், சாம்சுங் போன்றவற்றின் கைப்பேசிகளுக்கு நிகரான ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைத்து அறிமுகம் செய்துவரும் இந்த நிறுவனம் தற்போது மற்றுமொரு சாதன வடிவமைப்பில் காலடி பதிக்கின்றது.

அதாவது ஸ்மார்ட் தொலைக்காட்சிகளை வடிவமைத்து அறிமுகம் செய்யவுள்ளது.

இவை OnePlus TV என அழைக்கப்படவுள்ளன.

இந்த தகவலை இஷான் அகர்வால் என்பவர் தனது டுவிட்டர் தளத்தின் ஊடாக உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை இத் தொலைக்காட்சிப் பெட்டிகள் தொடர்பான ஏனைய தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்