5வது வருட பூர்த்தி: Xiaomi நிறுவனத்தின் அதிரடி வியப்பூட்டும் தகவல் விரைவில்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

சீனாவினை தளமாகக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசி நிறுவனமான Xiaomi இந்தியாவிலும் ஆழமாகக் காலூன்றியுள்ளது.

இவ்வாறு இந்தியாவில் காலடி எடுத்து வைத்து 5 ஆண்டுகள் நிறைவடையவுள்ளது.

இதனால் வாடிக்கையாளர்களுக்கு சர்ப்பிரைஸ் தகவல் ஒன்றினை விரைவில் வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை இந்தியாவிற்கான நிர்வாக இயக்குனர் மனு ஜெயின் தனது டுவிட்டர் தளத்தினூடாக தெரிவித்துள்ளார்.

இதில் வீடியோ ஒன்றினையும் பதிவிட்டுள்ள அவர் 5 சர்ப்பிரைஸ் தகவல்கள் காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Xiaomi நிறுவனத்தின் 5 வருட பூர்த்திக்கு இன்னும் ஒரு மாதகாலமே உள்ள நிலையில் குறித்த சர்ப்பிரைஸ் தகவல்களுக்காக வாடிக்கையாளர்கள் பலத்த எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்