பிரபலம் ஆகும் முன்னரே இழுத்து மூடப்பட்ட அமேஷானின் சமூகவலைத்தளம்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

உலகின் மிகப்பிரம்மாண்டமான ஒன்லைன் ஸ்டோர்களில் அமேஷானும் ஒன்றாகும்.

இத் தளமானது Spark எனப்படும் சமூகவலைத்தளம் ஒன்றினையும் உருவாக்கியிருந்தது.

இதனை 2017 ஆம் ஆண்டின் ஜுலை மாதத்தின் பிற்பகுதியில் அறிமுகம் செய்திருந்தது.

இதன் ஊடாக பயனர்களை கட்டாயப்படுத்தி பதிவுகளை இடச்செய்து வந்தது அமேஷான்.

அதாவது பொருட்களை கொள்வனவு செய்தவர்களை அது தொடர்பாக படங்கள், ஸ்டோரிஸ் மற்றும் பொருட்கள், கொள்வனவு தொடர்பான ஐடியாக்களை பதிவு செய்யுமாறு கட்டாயப்படுத்தி வந்தது.

இதனை அமேஷானின் ப்ரைம் அங்கத்தவர்கள் மாத்திரமே பயன்படுத்தக்கூடியதாகவும் இருந்தது.

இப்படியான குறித்த சமூகவலைத்தளத்தினை தற்போது எந்தவித அறிவித்தலும் இன்றி அமேஷான் நிறுவனம் இழுத்து மூடியுள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்