இந்த நிறுவன பொருட்களை பிளிப்கார்ட்டில் விற்பனை செய்வதற்கு நீதிமன்றம் தடை

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

GOQii Technologies நிறுவனத்தின் பொருட்களை பிளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்வதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்நிறுவனத்தின் பொருட்கள் அதிக சலுகை விலையில் விற்பனை செய்யப்படுவதாக அந்நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.

கடந்த திங்கட்கிழமை இதனை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மும்பை சிவில் நீதிமன்றம் GOQii Technologies நிறுவனத்தின் பொருட்களை பிளிப்கார்ட்டில் விற்பனை செய்வதற்கு தடை விதித்துள்ளது.

அது மாத்திரமன்றி பிளிப்கார்ட்டின் தாய் நிறுவனமான வால்மார்ட்டிலும் இந்நிறுவன தயாரிப்புக்களை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

GOQii Technologies நிறுவன தயாரிப்புக்கள் 65 சதவீதம் தொடக்கம் 70 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் விற்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்