பிரபல நிறுவனத்துடனான உறவை நீடிப்பது தொடர்பில் மீள்பரிசீலணை செய்யும் ஹுவாவி

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

ஹுவாவி நிறுவனத்திற்கு எதிரான அமெரிக்காவின் கடும் போக்கினை அடுத்து பல்வேறு அமெரிக்க நிறுவனங்களும் அந்நிறுவனத்துடனான தொடர்பினை துண்டித்து வருகின்றன.

ஆனால் முதன் முறையாக அமெரிக்க நிறுவனம் ஒன்றுடனான உறவை நீடிப்பது அல்லது துண்டிப்பது தொடர்பில் மீள்பரிசீலணை செய்து வருகின்றது.

அதாவது ஐக்கிய அமெரிக்காவின் மிகப்பெரிய டெலிவரி சேவை வழங்குனரான FedEx உடனான தொடர்பை நீடிப்பது தொடர்பாகவே மீள்பரிசீலணை இடம்பெறுகின்றது.

ஹுவாவி நிறுவனத்திற்கு சொந்தமான இரு பொதிகளை முகவரி மாற்றி அனுப்பியுள்ளது அந்த நிறுவனம்.

இதனை வேண்டுமென்றே FedEx நிறுவனம் செய்துள்ளதாக ஹுவாவி எண்ணுகின்றது.

இச் சம்பவத்தினை அடுத்து குறித்த முடிவினை எடுப்பதற்கு அந்நிறுவனம் முனைப்புக்காட்டி வருகின்றது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்