ஹுவாவி நிறுவனத்திற்கு எதிராக கூகுளின் மற்றுமொரு அதிரடி நடவடிக்கை

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

அமெரிக்காவை தளமாகக் கொண்ட பல தொழில்நுட்ப நிறுவனங்கள் ஹுவாவி நிறுவனத்துடனான ஒப்பந்தங்களை நிறுத்தி வருகின்றன.

இதற்கு கூகுள் நிறுவனமும் விதிவிலக்கு அல்ல.

கடந்த வாரம் ஹுவாவி கைப்பேசிகளுக்கான தனது அன்ரோயிட் இயங்குதளத்தினை நிறுத்தவுள்ளதாக கூகுள் அறிவித்திருந்தது.

இந்நிலையில் மற்றுமொரு அதிர்ச்சியை வழங்கியுள்ளது.

இதன்படி ஹுவாவி நிறுவனத்திற்கு ஸ்மார்ட் கைப்பேசிகளை தனது அன்ரோயிட் தளத்திலிருந்து நீக்கியுள்ளது.

அதாவது Huawei Mate X மற்றும் Huawei P30 Pro ஆகிய ஹுவாவியின் புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளை தனது அன்ரோயிட் தளத்தில் கூகுள் காண்பித்திருந்தது.

இப்படியான நிலையில் திடீரென அத்தளத்திலிருந்து இக் கைப்பேசிகளை நீக்கி ஹுவாவி நிறுவனத்திற்கு மேலும் அதிர்ச்சியளித்துள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்