மைக்ரோசொப்ட் நிறுவனத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி: டுவிட்டர் பயனரால் வந்த வினை

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

மைக்ரோசொப்ட் நிறுவனமானது இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் இணைய உலாவிக்கு பதிலாக எட்ஜ் எனப்படும் புதிய இணைய உலாவியினை சில வருடங்களுக்கு முன்னர் அறிமுகம் செய்திருந்தமை தெரிந்ததே.

இப் புதிய உலாவியானது முன்னைய இன்டர்நெர்ட் எக்ஸ்ப்ளோரரை விடவும் வேகம் கூடியதானதாகவும், இலகுவானதாகவும் காணப்படுகின்றது.

இப்படியிருக்கையில் ஆப்பிள் மேக் சாதனங்களுக்காக எட்ஜ் உலாவியினை வடிவமைத்து அறிமுகம் செய்வதற்கு மைக்ரோசொப்ட் காத்திருந்தது.

எனினும் மைக்ரோசொப்ட் நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்வதற்கு முன்னதாகவே அதனை தரவிறக்கம் செய்வதற்கான இணைப்பு இணையத்தளங்களில் பரவிவருகின்றது.

WalkingCat எனும் டுவிட்டர் பயனர் ஒருவரே இந்த தரவிறக்க இணைப்பினை கண்டுபிடித்து இணையத்தளங்களில் பரவவிட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்