புதிய கண்டுபிடிப்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்களை கோரும் பேஸ்புக் நிறுவனம்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்ட புதிய கண்டுபிடிப்புக்களை ஊக்குவிக்கும் நோக்கில் பேஸ்புக் நிறுவனம் விண்ணப்பங்களை கோரியுள்ளது.

இந்தியாவை மையப்படுத்தி இவ் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இத்திட்டத்திற்கு Innovation Accelerator Program 2019 என பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வானது இரண்டாவது தடவையாக நடாத்தப்படவுள்ளது.

இத் திட்டத்திற்காக T-Hub எனும் நிறுவனத்துடன் இணைந்து செயற்பட பேஸ்புக் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதில் பங்குகொள்வதற்கு பெண்கள் மற்றும் சிறுமிகளை மையப்படுத்திய பிரச்சினைகள், விவசாயம், ஆரோக்கியம், கல்வி, காலநிலை மாற்றம் போன்ற பல்வேறு கருப்பொருட்களை அடிப்படையாகக் கொண்டு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் கொண்ட சாதனங்களை உருவாக்க வேண்டும்.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்